விமான பயணிகளே…துணிகளுக்கான செலவை குறைக்க வேண்டுமா? இந்த பெண்ணை போன்று செய்யுங்கள்..!

துணிகளுக்கான செலுத்தும் செலவை குறைப்பதற்காக, பிலிப்பைன்ஸைச் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற பெண்மணி, தனது சூட்கேஸில் அடைத்து வைத்திருந்த அணைத்து ஆடைகளையும் அணிந்தார். இதன் மூலம் அவர் சூட்கேசின் எடை குறைந்தது.
இது குறித்த விளக்கத்தை அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டீருந்தார். அதில், விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் தனது சாமான்களை சரிபார்க்கும் போது, கேரி-ஆன் லக்கேஜ் அதிகபட்ச எடை 7 கிலோவை கடந்தால் பணம் கெட்டவேண்டும் என விமான நிலைய அதிகாரி கூறினார். அதற்க்கு அவர், எந்த பிரச்சினையும் இல்லை என கூறினார். அவர் உடைமைகளில் எடை, 9 கிலோ. அவளது உடைமைகள் எடையைக் குறைக்க, அவள் சூட்கேஸைத் திறந்து பல ஆடைகளை வெளியே எடுத்தாள். அவள் அவற்றில் பெரும்பாலானவற்றை அணிந்தாள், அது சூட்கேஸின் எடையை 6.5 கிலோவாகக் குறைத்தது.
அவளது பதிவு, 31,000 மக்களுக்கு மேல் விரும்பப்பட்டு, 21,000 பேர் அதனை ஷேர் செய்தனர். கருத்துக்கள் பிரிவில், பலரும் அவளை பாராட்டினார்.