“ஜம் ஜம்” புனித நீரை கொண்டு வர தடையில்லை – ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு!

இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவில் உள்ள கோவிலுக்கு ஹஜ் பயணம் செல்வோர் திரும்பி வரும் போது ஜம் ஜம் எனப்படும் கிணற்று நீரை கொண்டு வர தடையில்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக , ஹஜ் பயணம் சென்று திரும்புவோர் ஜம் ஜம் எனப்படும் புனித நீரை விமானத்தில் கொண்டுவர தடைவிதிப்பதாக விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பின்னர், இந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.

சாதாரணமாக பயணிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் 5 கிலோ வரையில் பொருட்களை எடுத்து செல்லவும் விமான நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.