தோனி பிறகு அந்த சாதனையை நான் படைப்பேன் -விராட் கோலி சபதம்..!

தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுவேன் என கூறியுள்ளார்.
2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகமான வருடமே தோனி தலைமையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. அதன் பின்னர் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றவில்லை.
அப்படியே இறுதிவரை சென்றாலும் கடைசியில் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி அளித்த பேட்டியில் அடுத்த வருடம் நடைபெற உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை கைப்பற்றி  தோனிக்கு  அடுத்து 20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கேப்டன் என்ற சாதனை படைப்பேன் என கூறி தெரிவித்துள்ளார்.
 

author avatar
murugan