நடிகர் சித்தார்த்தின் 41 வது பிறந்தநாள் இன்று!

நடிகர் சித்தார்த் இந்திய திரையுலகில் நடிகராகவும், பின்னணி  பாடகராகவும்,எழுத்தாளராகவும்,

By Rebekal | Published: Apr 17, 2020 10:38 AM

நடிகர் சித்தார்த் இந்திய திரையுலகில் நடிகராகவும், பின்னணி  பாடகராகவும்,எழுத்தாளராகவும், தயாரிப்பளாராகவும் பன்முக தன்மையுடன் வலம் வருகிறார். பல கதாபாத்திரங்களிலும் இவர் நடித்து வருகிறார். 2002 ஆம் ஆடு தமிழில் தனது முதல் திரைப்படமாகிய கன்னத்தில் முத்தமிட்டாள் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாக்கினார். ஆனால், அந்த படம் அவ்வளவாக புகழ் பெறவில்லை. இந்நிலையில், அதன் பிறகு அவர் நடித்த பாய்ஸ் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றதுடன், அறிமுக நடிகருக்கான விருதையும் பெற்று தந்தது. அதன் பிறகு அவர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய பல மொழிகளில் படங்கள் வெளியாகியது. கடந்த வருடம் அவர் நடிப்பில் தமிழில் வெளியாகிய சிகப்பு மஞ்சள் பச்சை எனும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படி ஹிரயுலகில் கலக்கு கலக்கு என கலக்கி கொண்டிருக்கும் சித்தார்த் 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்தவர். இன்றுடன் அவருக்கு 41 வயது ஆகிறது. இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc