BREAKING:இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு..?

  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி  8,826 பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
  • கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வாகி இருப்பதால் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டர் ஃபையர்மேன் பதவிகளுக்கான 8,826 இடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வின் முடிவுகள் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகியது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு நடந்து உள்ளதாக கூறி புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்வில் வேலூர் மாவட்டத்தில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தவர்கள் தேர்வானதாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 0610531 முதல் 0610798 வரை உள்ள ஓரிரு எண்களை தவிர மற்றவை தேர்வாகி இருப்பதால் சந்தேகம் என புகார்.

இது குறித்து  தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகளிடம் கேட்டபோது இது தேர்வானவர்களின் பட்டியல் இல்லை . இது எழுத்துத் தேர்வின் முடிவுகள் மட்டுமே என்று அவர்கள் கூறியுள்ளனர். மொத்தமாக 8826 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

இதில் ஒரு பணியிடத்திற்கு 5 பேர் என்ற விகிதத்தில் 47 ஆயிரம் தேர்வாகி இருக்கிறார்கள். அந்த எழுத்து தேர்வில் தேர்வர்கள் தொடர்ந்து தேர்வாகி இருக்க காரணம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் என்பது ஒவ்வொரு பிரிவிற்கும் மாறுபடும் என கூறியுள்ளனர்.

மேலும் எழுத்து தேர்விற்கு பிறகு உடற்தகுதி போன்றவை உள்ளது .இவை அனைத்தும் முடிந்து இறுதி முடிவு வரும்போது தேர்வர்கள் தொடர்ந்து தேர்வாகி இருந்தால் முறைகேடு நடந்தஇருக்க வாய்ப்பு உள்ளது என கூறலாம். ஆனால் இப்போதுதே முறைகேடு நடந்து உள்ளதாக கூறுவது தவறு என கூறினர் .

author avatar
murugan