பாகிஸ்தானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அபிநந்தனின் சிலையும்! காபி குடித்த குவளையும்!

இந்த வருடம் பிப்ரவரி மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வான்வெளி தாக்குதலில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தினார் அப்போது அவர் சென்ற விமானம் தீப்பிடித்துவிட உடனே பாராசூட் மூலம் தப்பித்தார். ஆனால் அவர் பாராசூட்டில் விழுந்த இடம் பாகிஸ்தான் ஆகும்.
அதனால் அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து, விசாரணை செய்தது. ஆனால் அபிநந்தன் எந்த தகவலையும் கொடுக்கவில்லை. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தனுக்கு காபி கொடுக்கப்பட்டு உபரசிக்கப்பட்டது. பின்னர், இருநாடுகளுக்கு இடையேயான பலகட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனை குறிப்பிடும் வகையில், பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வான்வெளி படை சார்பாக அபிநந்தன் சிலை, அவர் காபி குடித்த குவளை, அவர் ஓட்டிவந்த விமானத்தின் சிறு பகுதிகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.