தீபாவளிக்கு மொத்தமாக 12, 575 சிறப்பு பஸ்கள்-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தீபாவளிக்கு மொத்தமாக  12, 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை

By venu | Published: Sep 20, 2019 12:37 PM

தீபாவளிக்கு மொத்தமாக  12, 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை ஆகும் .அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளி சிறப்பாக கொண்டாட இருக்கிறது.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.தீபாவளியையொட்டி ஆண்டுதோரும் தமிழக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதனால்  நேற்று  தீபாவளிக்கு சிறப்பு அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார். இதன் பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிறப்பு முன்பதிவு வருகின்ற 23-ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.அக்டோபர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.தீபாவளிக்கு மொத்தமாக  12, 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று கூறினார்.
Step2: Place in ads Display sections

unicc