இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரியகோடு பகுதியில் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரெமி பிராங்க்ளின்.அந்த பள்ளி மிகவும் அனைவரும் கண்டிப்பாக நடந்து கொள்வார்களாம்.
ஒரு நாள் கணக்கு வகுப்பு நடந்திருக்கிறது.அப்போது ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதி அந்த மாணவியிடம் கணக்கை பூர்த்தி செய் என்று கூறியுள்ளார்.அந்த கணக்கிற்கு சரியான பதிலை பூர்த்தி செய்யாததால் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்னால் அந்த மாணவி ரெமியை அவதூராக பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த மாணவி அழவில்லை.சிறிது நேரம் நிற்க சொல்லி தண்டனை அளித்துள்ளார்.பிறகு அந்த மாணவியை அவரது இருக்கையில் சென்று அமர சொல்லியிருக்கிறார்.
அப்போது தனது இருக்கையில் அமர்ந்த அந்த மாணவி ரெமி கரும்பலகையை பார்த்தபடி அமர்ந்துள்ளார்.ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருப்பதால் மற்ற மாணவர்களும் ரெமியின் செயலை கவனிக்கவில்லையாம்.
பிறகு பாடம் நடத்தி முடிந்த பிறகு ஆசிரியர் வெளியே செல்ல இருந்த போதும் ரெமி அப்படியே அமர்ந்திருந்துள்ளார்.அதை பார்த்த ஆசிரியர் உடனே பக்கத்தில் சென்று அவரை தட்டியுள்ளார்.அப்போது முன்னே இருந்த மேசையில் அப்படியே சரிந்துள்ளார்.
அப்போது பதறி போன ஆசிரியர் உடனே பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.அவர் உடனே அந்த மாணவியின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு உங்களின் மக்களுக்கு ரொம்ப தலைவலி உடனே வாருங்கள் என கூறியுள்ளனர்.
என்ன எதுவென்று தெரியாமல் அந்த மாணவியின் பெற்றோர் பதறியடித்து வந்துள்ளனர்.அப்போது மயங்கி கிடந்த தங்களின் மகளை பார்த்து உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.
அங்கு அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி இறந்து 1 மணி நேரத்திற்க்கு மேலாகி விட்டது என கூறியுள்ளார்.உடனே அந்த மாணவியின்  பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவியின் இந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.