ஏ.ஆர்.ரகுமான் இயக்கிய படம் சர்வதேச விழாவிற்கு தேர்வாகியுள்ளது…!!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்திய சினிமா தாண்டி உலக சினிமாக்களில் கலக்கி வருகிறார்.

இவர் இயக்கிய ‘ ஒன் ஹார்ட் ‘ என்கிற இசை திரைப்படம், 2018 வருடத்திற்கான கண்சோனன்ஸ் இசை மற்றும் நடன விழாவிற்கு தேர்வாகியுள்ளது.

இது தான் திரைப்பம், இசை மற்றும் நடனத்திற்கான முதல் சர்வதேச திரைப்பட விழா என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறுகிறது.

உலகமெங்கிலும் இருந்து கலந்துகொண்ட படங்களில் 22 படங்கள் திரையிடலுக்கு தேர்வாகியுள்ள. அதில் இந்தியாவில் இருந்து தேர்வான ஒரே படம் ‘ ஒன் ஹார்ட் ‘ மட்டுமே.

இந்த விழாவில் ஜூரி விருது, ரசிகர்கள் விருது, பார்வையாளர்கள் விருது என மூன்று வகை விருதுகள் வழங்கப்படுகின்றன.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment