மாநிலங்களவையில் அமளி ! எம்.பி. க்கள் 8 பேர் இடைநீக்கம்

மாநிலங்களவையில் அமளி ! எம்.பி. க்கள் 8 பேர் இடைநீக்கம்

  • mps |
  • Edited by venu |
  • 2020-09-21 11:36:38

அநாகரீகமாக நடந்துகொண்டதாக எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.

எனவே மாநிலங்களவையில் ,மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக துணைத் தலைவர் அறிவித்தார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து   ஆவேசமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதா நகலை கிழித்து எறிந்தனர். துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினார். துணைத் தலைவரின் மேசையில் இருந்த பொருட்களை தட்டி விட்ட எம்பி.க்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இந்த அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அநாகரீகமாக நடந்துகொண்டதாக எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களான டெரிக் ஓ பிரையன் ,டோலா சென்,காங்கிரஸ் எம்.பி.க்களான ராஜீவ் சதவ் ,நசீர் ஹுசைன் ,ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களான ராகேஷ்,இளமாறம் கரீம்,ஆம் ஆத்மி எம்.பியான சஞ்சய் சிங் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Latest Posts

"7.5% இடஒதுக்கீடு தரக்கூடாது" - கடிதம் எழுதிய பாஜக கல்வி பிரிவு மாநில செயலாளர்.. எல்.முருகன் விளக்கம்!
9 ஆண்டுகளை கடந்த தளபதியின் வேலாயுதம்.!படம் குறித்த நெகிழ்ச்சி பதிவினை பகிர்ந்த இயக்குனர்..!
#BREAKING : அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவமனை அறிக்கை
18,600 அமெரிக்க டாலர்களை கைப்பற்றிய சுங்கத்துறை.!
CSK vs RCB: தோல்விக்கான காரணத்தை கூறிய விராட்..!
திருமாவளவனை உடனடியாக கைது செய்ய வேண்டும்- ஹெச் .ராஜா
தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.! மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி.!
இளம் வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் இந்திய, பாகிஸ்தான் பெண்கள்- ஆய்வில் தகவல்..!
ஹாரர் திரில்லருடன் சிரிக்க வைக்க தயாராகும் சிவா.!
தோனி, ரோஹித், வரிசையில் இணைந்த கிங் கோலி..!