24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழப்பு.! கவலைக்கிடமாக 4,800 பேர் மருத்துவமனையில்.!

  • சீனாவில் கொரோனா வைரசால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது.

சீனாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹூபே சுகாதார மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொரோனா வைரஸால் உயிரிழப்பின் எண்ணிக்கை 636-ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 31161 பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீனாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் புதிதாக 3143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24 மணி நேரத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பின்னர் இந்த வைரசால் 4,800 பேர் மோசமான நிலையில் உள்ளார்கள் என தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனாவின் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் சீன மக்கள் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் 31 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் 3 பெரும் சீனாவில் ஹூபே மாகாணத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவில் பல நகரங்களில் ஒவ்வொரு வீடுகளில் இருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய சீனாவில் உள்ள ஹூபே மாகாணம் கடந்த இரு வாரங்களாக பூட்டப்பட்ட நிலையில் தான் உள்ளது. இங்குள்ள ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. ஹூபே மாகாணதின் தலைநகர் வுஹானில் தான் இந்த வைரஸ் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்