எஜமானை காப்பாற்ற 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் .!

எஜமானை காப்பாற்ற 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள் .!

  • கோவை மாவட்டம்  ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம்.
  • ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் செல்லும்போது  திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது.
கோவை மாவட்டம்  ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவர் வீட்டின் அருகே ராமலிக்கத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார்.தோட்டங்களை பாதுகாக்க 3 நாய்களை ராமலிங்கம் வளர்த்து வந்து உள்ளார். நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றுள்ளார். அப்போது அவர்களுடன் பாதுகாக்க வளர்த்து வந்த 3 நாய்களும் சென்றது. அப்போது அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது வழியில் திடீரென 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை  நோக்கி வந்தது. இதனால் ராமலிங்கம் அவரது நண்பர் இருவரும் பின் நோக்கி சென்றனர். இந்நிலையில் அவர்களுடன் வந்த மூன்று நாய்களும் பாம்பை நோக்கி சீரிப்பாய்ந்து பாம்பு கடித்து குதறியது. இந்த காட்சியை ராமலிங்கம் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியும் வருகிறது.

Latest Posts

குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!