பேரணியால் வந்த விளைவு ..!வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்!

  • டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
  • பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் போனது. 

டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல்  பிப்ரவரி 8-ஆம் தேதி  நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .கடந்த  14-ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.நாளை (ஜனவரி 21)வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இதற்கு இடையில் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்றார்.ஆனால்  வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில்  மதியம் 3 மணிக்குள் ஆஜராக வேண்டும். கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்த பேரணியால் அவரால் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல்ல முடியவில்லை.இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.இதனையடுத்து நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.