உ.பி : கனமழையால் ஒரேநாளில் 44 பேர் பலி !

உத்திர பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளம் காரணமாகவும் சுவர்கள் இடிந்தும், பாம்புகள் கடித்தும், மின்னல் தாக்கியும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் அடுத்த 2 நாட்களுக்கும் கனமழை தொடரும் என்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அமேதி, லக்னோவில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முதல்வர் யோகி மழையால் உயிரிழந்த குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

author avatar
Vidhusan