மத்திய அரசிடமிருந்து குஜராத்திற்கு வந்திறங்கிய 24,000 ரேபிட் கிட் கருவிகள்.!

மத்திய அரசிடம் இருந்து 24,000 ரேபிட் கிட் கருவிகள் குஜராத்திற்கு வந்திறங்கியுள்ளன.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றை விரைவாக அரை மணிநேரத்தில் கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளை சீனாவில் இருந்து முதற்கட்டமாக 3 லட்சம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்துள்ளது.

வந்திறங்கிய ரேபிட் கிட்களை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுத்து வருகிறது. அதன்படி குஜாராத் மாநிலத்திற்கு 24,000 ரேபிட் கிட் கருவிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 1200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 41 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.