சீன வசூலில் ஏமாற்றியதா ஷங்கரின் பிரம்மாண்ட 2.O?!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் 2.O. இந்த படத்தை லைகா நிறுவனம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்தது. இப்படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடித்து இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முக்கிய மொழிகளில் வெளியாகி சுமார் 700 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருந்தது. அண்மையில் சீனாவிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. சீனாவில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இப்படம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. சென்ற வார முடிவில் இப்படம் 18 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். பாகுபலி-2 திரைப்படம் சீனாவில் மொத்தமாக 60 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. தற்போது அந்த வசூலை 2.O முறியடிப்பது மிகவும் கடினம் என சினிமா வட்டாரங்கள் கூறுகிறார்கள்.