140 ஆண்டு இந்தியாவை கட்டி ஆண்ட ஹார்லிக்ஸ்…! நிறுவனம் கைமாறியது..!!

இந்தியாவில் அனைவராலும் அறியப்படும் முன்னணி ஊட்டச்சத்து ஹார்லிக்ஸ் நிறுவனத்தை தற்போது யூனிலிவர் விலைக்கு வாங்கி உள்ளது.
இந்த ஹார்லிக்ஸ் பின் ஒரு வரலாறே மறைந்து இருக்கிறது.உலக போரின் இறுதியில் ராணுவ வீரர்களுக்கு ஊட்டசத்து அளிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தால், ஹார்லிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.இது இந்தியாவில் 140 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்த நிலையில் சிறந்த ஊட்டச்சத்து பான சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Related image
இந்தநிலையில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விலை வாங்க யூனி லிவர் மற்றும் கோக கோலா மற்றும் கிராப்ட் ஹெய்ன்ஸ் ஆகிய  நிறுவனங்கள் தங்களுக்குள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில் யூனி லிவர் நிறுவனம் 31,700 கோடி ரூபாய் கொடுத்து ஹார்லிக்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளது.
Image result for யூனிலிவர்
இந்த கைமாறலை பார்க்கும் போது  ஹார்லிக்ஸ் மீண்டும் ஒரு இங்கிலாந்து நிறுவனத்திடமே கைமாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்திய ஊட்டச்சத்து சந்தையில் ஹார்லிக்ஸ் தனது விற்பனை சதவிதம் 43 சதவிகிதம் மேலும் கடந்த நிதியாண்டில் ஹார்லிக்ஸ் மட்டும் விற்பனை செய்ததன் மூலம் கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனம் சுமார் 4200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
kavitha

Leave a Comment