பழங்குடியின மக்கள் இடையே நடைபெற்ற மோதலில் 13 பேர் பலி.!

ஆப்கானிஸ்தானில பல கலாச்சாரங்களை பின்பற்றும் பல தரப்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இதில் ஒரு தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டூர் பாபா மற்றும் நஸ்யான் மாவட்டத்தில் வாழ்ந்துவந்த இரு தரப்பு பழங்குடியின மக்களுக்கு இடையே நடைபெற்ற நிலம் சார்ந்த பேச்சுவார்த்தையில் திடீரென மோதல்ஏற்பட்டது.

இந்த மோதலின் போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களை வைத்து தாக்கி கொண்டனர். இந்த மோதலில்  13 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

author avatar
murugan