75 -க்கும் மேற்பட்ட நடிகர்கள்…விஜய் சேதுபதியின் 25 வது படம்…வெளியானது ட்ரைலர்…!!

75 -க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்த நடிகர் விஜய் சேதுபதியின் 25வது படமான  சீதக்காதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தற்போது மக்கள் மத்தியில் அதிக ரசிகர்களை பெற்று பெயர் சொல்லும் நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஜய்சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ அமைந்தது.இந்த படம் எனக்கு 25வது படமாக அமைந்தது என்னுடைய  பாக்கியம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகிள்ளது ‘சீதக்காதி’ படம். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தைத் அடுத்து நடிகர் விஜய் சேதிபதி மீண்டும் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘சீதக்காதி’ .

இந்த படத்தில் 80 வயது நாடகக் கலைஞரான அய்யா மற்றும் அவருடைய மகன் குமார் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.இந்த படத்தில் 75 -க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்தின்  ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment