10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடிய சூப்பர் ஸ்டார்! காரணம் இதுதானா?!

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

By manikandan | Published: Dec 03, 2019 11:42 AM

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இவரது பிறந்தநாளான டிசம்பர் 12ஐ இவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதே நாளில் இவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் ரசிகர்கள் குவிந்து விடுவாரக்ள். இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை தனது வீட்டாருடன் கொண்டாடினார். 10 நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 2இல் சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு காரணம் இந்து மத முறைப்படி அவரது நட்சத்திரமானது நேற்று பிறந்தாளுக்கு  10 நாட்களுக்கு முன்னதாக இருந்ததால் நேற்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc