வாக்கி டாக்கி கவிஞர் இன்ஸ்பெக்டர்…குவியும் பாராட்டுகள்..!!

சென்னையில் இரவு நேர பணியின்போது, காவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில், வாக்கி டாக்கியில் கவிதை சொல்லி அசத்தி வரும் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னையில் வழக்கம்போல் இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வடசென்னை துணை ஆணையர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் தாங்கள் இருக்கும் பகுதிகளில் நடப்பவற்றை வாக்கி டாக்கி மூலம் பரிமாறிக் கொண்டிருந்தனர். அப்போது, கம்பீரமான குரலில் ஒலித்த கவிதை ஒன்று, காவலர்கள் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. உன் கடமைக்கு நீ உயிரைக் கொடு என்று தொடங்கிய கவிதை, பணியில் இருந்த காவலர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தது.

கவிதையை படித்தது யார் என விசாரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாக காவல் நிலையத்தின் ஆய்வாளர் கனகேசன் தான், அந்த கவிதைக்கு சொந்தக்காரர் என்பது தெரியவந்தது.இதையடுத்து, காவல் ஆய்வாளர் கனகேசனுக்கு பாராட்டு தெரிவித்த துணை ஆணையர் ஜெயலட்சுமி, அவரது தமிழ் புலமைக்கும், ஆர்வத்துக்கும் வாழ்த்துக் கூறினார். இதனிடையே, கனகேசனின் கவிதை மொழி, சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது..

dinasuvadu.com 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment