ரூ 1,00,00,000 மதிப்பிலான நகைகள் மீட்பு….கூகுள் மேப்- பயன்படுத்தி திருடும் கொள்ளையன்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்பலோ மருத்துவமனை மருத்துவர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.அதே போல சென்னையில் தேனாம்பேட்டை , வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும்  செல்வந்தர் வீடுகளில்  கொள்ளை நடைபெற்றதால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
அப்போது இந்த கொள்ளையர்கள் கூகுள் மேப் உதவியுடன் அதிக செல்வர்ந்தர் இருக்கும் இடமான வீடுகளை தேர்வு செய்து , அந்த வீடுகளை ஆட்டோ-வில் சென்று நோட்டமிட்டு , கையுறைகள் , முகமூடி பயன்படுத்தி போலீசாரால் கண்டுபிடிக்க முடியாதளவு கொள்ளையை நிகழ்த்தியுள்ளது தெரியவந்தது.
robbery, க்கான பட முடிவு
இந்நிலையில் வேறொரு கொள்ளை வழக்கில் சிக்கிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த  சத்திய ரெட்டி என்பவனை தெலுங்கானா வடக்குமண்டல போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில் அவனிடம் நடத்திய விசாரணையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வேலைபார்க்கும் டாக்டர் வீட்டில் கூகுள் மேப் உதவியுடன் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.இந்நிலையில் தெலுங்கானா போலீஸ் தமிழக போலீஸ்க்கு கொடுத்த தகவலின் பேரில் உதவிஆணையர் முத்துவேல் தலைமையிலான தனிப்படையினர் தெலுங்கானா சென்று கொள்ளையனிடமிருந்த 120 சவரன் நகைகள் மீட்டுள்ளனர்.இந்நிலையில் கொள்ளையன் தற்போது தெலுங்கானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற அனுமதி பெற்று கொள்ளையனை சென்னை கொண்டு வந்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
dinasuvadu.com 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment