மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் விமானம் தீப்பற்றி எரிந்த விபத்து!12பேர் உடல் கருகி பலி ….

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகாவில் பசிபிக் கடற்கரையோரச் சுற்றுலாத் தளத்தில் இருந்து அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் 10பேரை ஏற்றிக்கொண்டு நேச்சர் ஏர் என்கிற தனியார் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.கோஸ்டாரிகாவில் விமானம் தீப்பற்றி எரிந்த விபத்தில் அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகள் 10பேரும் விமானிகள் 2பேரும் உயிரிழந்தனர்
விமானத்தில் விமானிகள் 2 பேர் இருந்தனர்.சுற்றுலா பயணிகள் பத்து பேர் இருந்தனர் . இந்த விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெழுந்த சற்றுநேரத்தில் தீப்பற்றி வெடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் 10பேரும் விமானிகள் 2பேரும் உடல்கருகி உயிரிழந்தனர். புத்தாண்டு விடுமுறையையொட்டிச் சுற்றுலாவுக்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.நீண்ட நேரத்திற்கு பின்னர் போராடி தீயை அனைத்தனர் தீயணைப்புவீரர்கள் …
source: dinasuvadu.com

Leave a Comment