நிவாரணப் பணிகளில் தாமதம்….தகவல் அளியுங்கள் உடனடி நடவடிக்கை…வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்…!!

நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளியுங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும் – வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால்
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
புயல் பாதித்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை, நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இரவும் பகலுமாக அதிகாரிகள், ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் தகவல் அளியுங்கள்; நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment