கொசுக்களை அழிக்க களத்தில் இறங்கிய கூகுள் நிறுவனம்!!!

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் என அழைக்கப்படும் ஆல்பபெட்ஸ் நிறுவனம் கொசுக்களை உலகில் இருந்து அளிக்க புதிய முயற்சியை கலிபோரியாவில் மேற்கொண்டுள்ளது. பேக்டிரியா மூலம், கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி அதன் மூலம் கொசு உற்பத்தியை குறைக்கும் முடிவில் இரனாகியுள்ளது.

அதாவது ஆண் கொசுக்களை பிடித்து அதில் ஒரு பேக்டிரியாவை செலுத்தி அதனை பறக்க விடுகிறார்கள். பிறகு அது பெண் கொசுக்களோடு இணைந்து, பெண் கொசுக்கள் முட்டையிடும் போது, அந்த முட்டைகள் குஞ்சுபொரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. கேட்பதற்கு நகைச்சுவை போல தெரிந்தாலும், முதல் முயற்சியாக 80,000 ஆண் கொசுக்களை பிடித்து அதில் பேக்டிரியாவை செலுத்தி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.

இதேபோல சோதனை ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு அங்கு 80 சதவீத கொசுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளன. இந்த கொசுக்களால் இந்த உலகில் எந்த பயனும் இல்லை.இருந்தாலும் இந்த கொசுக்கள் முழுவதையும் அழித்துவிட்டால் எந்த வித பாதிப்பும் இருக்காது என்று உறுதியாக கூறமுடியாது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment