காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதா?! தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மா!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இதன் தமிழ் பதிப்பில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வருகிறார். 

பிரபல இயக்குனரான பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதல் பார்வை. டீசர் என ரசிகர்களை கவரும் படி அமைந்தது. இதனை தொடர்ந்து இப்பட ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட படக்குழு முயற்ச்சி செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதமும்,  ஜனவரி மாதமும் பெரிய படங்கள் அனைத்தும் ரிலீஸாகிவிடும் என்பதால் பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்து உள்ளார்கள் என தெரிகிறது. 

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment