அதிரடி ஆட்டக்காரர் ஜெயசூர்யாவை முந்திய ரோகித்…!அசத்தல் சாதனை

  • அதிக சதம் அடித்த  இருந்த ஜெயசூர்யாவை முந்தி ரோகித் சாதனை
  • தனது 29 சதத்தை அடித்து ஜெயசூர்யாவின் சாதனை முறியடித்தார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் உதவியது அதில் அதிரடியாக விளையாடி 119 ரன்களை குவித்து இருந்தார்.அதில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும்.தனது ஒருநாள் போட்டியில் ரோகித்தின் 29வது சதம் இதுவாகும். 224 போட்டியில் 217 இன்னிங்சில் இதை எடுத்துள்ளார். இதன் மூலமாக அதிக சதம் அடித்த வீரர்களில் இதுவரை 4வது இடத்தில் இருந்து வந்த ஜெயசூர்யாவை முந்தினார்.

அவ்வாறு பட்டியலில் தற்போது வரை  சச்சின் தெண்டுல்கர் (49 சதம்), விராட் கோலி (43) சதம், ரிக்கி பாண்டிங் (30) சதம் ஆகியோருக்கு அடுத்த படியாக தற்போது ரோகித் சர்மா 4வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் ஜெயசூர்யா 28 செஞ்சுரியுடன் 5வது இடத்தில் உள்ளார்.

32 வயது நிரம்பிய ரோகித் சர்மா 29 சதத்தில் 19 செஞ்சுரியை கடைசி 70 இன்னிங்சில் எடுத்து முத்திரை பதித்து உள்ளார்.கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு 147 இன்னிங்சில் 10 சதம் அடித்து இருந்தார். தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா தனது 8வது சதத்தை (40 இன்னிங்ஸ்) எடுத்தார். தெண்டுல்கர் 9 சதம் (70 இன்னிங்ஸ்) அடித்து முதல் இடத்தில் உள்ளார். அதே போல் விராட்கோலி 38 இன்னிங்சில் 8 சதம் அடித்து உள்ளார்.கோலியை ரோகித் சமன் செய்தார்.

ஒரு அணிக்கு எதிராக 8 சதங்களுக்கு மேல் இந்திய வீரர்கள் மட்டுமே அடித்து உள்ளனர். கோலி, தெண்டுல்கர், ரோகித் சர்மா இந்த வரிசை பட்டியலில் உள்ளனர்.கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 சதம் அடித்து உள்ளார்.அதே போல் ரோகித் 4 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப்படைத்தார். 9 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்த 3வது வீரர் ரோகித்  ஆவார் இதை தனது 217 இன்னிங்சில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

author avatar
kavitha