இன்றைய (08.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்று சிறப்பான நாள் . கடினமான பணிகளையும் நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறப்பான நாள்.

ரிஷபம்:

இன்று நீங்கள் சுய வளர்ச்சிக்கான செயல்களில் ஈடுபட சிறந்த நாள். ஆனால் இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். நெருங்கிய நண்பர்கள் கூட நம்பிக்கை துரோகம் செய்வார்கள்.

மிதுனம்:

இன்று ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவதற்கு உகந்த நாள். இன்று பிரார்த்தனை மேற்கொள்வது மற்றும் இசை கேட்பது உங்களுக்கு ஆறுதலைத் தரும்.

கடகம் :

உங்கள் திறமையான தொடர்பு மூலம் சிறப்பான பலன்களைக் காண முடியும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மற்றும் மந்திர உச்சாடனம் செய்வது ஆன்மீக சொற்பொழிவுகள் கேப்பதன் மூலம் சிறப்பாக உணரலாம்.

சிம்மம்:

இன்று கடினமான சவால்கள் நிறைந்து காணப்படும். நீங்கள் திறமையாக கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது.

கன்னி:

இன்று நீங்கள் கவலைக்கு ஆளாகலாம். இதனால் உங்கள் அடிப்படை பணிகளைக் கூட உங்களால் செய்ய இயலாது. சகஜமான அணுகுமுறை தேவை.

துலாம்:

இன்று அனைத்து விஷயங்களிலும் பொறுமை தேவை. மனதில் குழப்பத்திற்கு ஆளாகாதீர்கள். எந்த செயலையும் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும்.

விருச்சிகம்:

இன்று உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் கிடைக்கும் வகையிலான நற்பலன்கள் காணப்படும்.பிறருடன் சுமூகமாகப் பழகுவது நன்மை தரும்.

தனுசு:

இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மகிழ்வைத் தரும். இன்று செயல்கள் சமூகமாக நடைபெறாது.

மகரம்:

இன்று சிறப்பான நாளாக அமையாது. தைரியம் குறைந்து காணப்படும். நீங்கள் நம்பிக்கையுடன் தைரியமான மன ஆற்றலுடன் நடந்து கொள்ள வேண்டும்.

கும்பம்:

இன்று செயல்பாடு மிக்க நாளாக இருக்காது. இன்று பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குறைந்த எதிர்பார்ப்புடன் செயல்பட்டால் அதற்குண்டான வெகுமதி கிடைக்கும்.

மீனம்:

உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உங்களின் விட்டுக்கொடுத்து போகும் அணுகுமுறை காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.