இன்றைய (04.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று சிறப்பான நாளாக இருக்கும்.உங்கள் முயற்சி மூலம் இலக்கை அடைவீர்கள். உங்களிடம் தைரியமும் உறுதியும் நிறைந்து காணப்படும்.

ரிஷபம்: இன்று வளர்ச்சி குறைவாக காணப்படும். பெரிய லட்சியங்களை அடைய இன்று சாத்தியம் குறைவாக இருக்ககும். சிறப்பாக திட்டமிட்டால் இன்று வெற்றி அடையலாம்.

மிதுனம்: இன்று அமைதியாக மகிழ்ச்சியாக இருங்கள். வெற்றி பெறுவதற்கு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் பணியில உங்களுக்கு திருப்தி காணப்படாது.

கடகம் : இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள். தெய்வீகப் பாடல்களை கேட்பதன் மூலம் நீங்கள் ஆறுதலைப் பெறலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.

சிம்மம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.இன்று எடுக்கும் முக்கியமான முடிவுகள் நற்பலன்களைத் தரும். நீங்கள் குறைந்த நேரத்தில் விரைவாக பணியை முடிப்பீர்கள்.

கன்னி: குறைந்த முயற்சியில் உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். இன்று நகைச்சுவை போக்கின் காரணமாக சிறந்ததை சாதிப்பீர்கள்.

துலாம்: விஷயங்களைக் கையாள்வதில் நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். இன்று சிறிதளவு பொறுமைஅவசியம்.

விருச்சிகம்: இன்று வெற்றி எளிதாக கிடைக்கும். உங்கள் இணக்கமான தொடர்பாடல் மூலம் மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்களிடம் காணப்படும் உறுதி உங்களை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்.

தனுசு: இன்று சற்று சிரமமான நாள்.இன்று பொறுமையும் உறுதியும் மிகவும் அவசியம்.சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். இன்று பணிச்சூழல் பரபரப்பாக காணப்படும்.உங்கள் சக பணியாளர்களுடன் சில சிக்கல்கள் காணப்டும்.

மகரம்: இன்று உங்களிடம் தைரியமும் உறுதியும் காணப்படும். இதனால் வளர்ச்சி காணப்டும். தைரியமான மனவலிமை காரணமாக வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் அபாரமான வளர்ச்சி காணப்படுகின்றது.

கும்பம்: இன்று நீங்கள் அமைதியான அனுசரனையான போக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. வெற்றியும் கிடைக்கும்.இன்று பணியிடச் சூழல் கடினமாக காணப்படும்.

மீனம்: இன்று சிக்கலான சூழ்நிலைகளை சமாளிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழலில் சிறப்பாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். விரைந்து பணிகளை முடிக்க உங்கள்சக பணியாளர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.