, ,

இதனை செய்தால் போதும்.. உங்கள் மொபைலில் பப்ஜி விளையாட்டை விளையாடலாம்!

By

சீன செயலிகள் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்த காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்தியாவில் முதற்கட்டமாக 59 செயலிகளை மத்திய அரசு முதற்கட்டமாக ரத்து செய்தது. பின்னர், பப்ஜி உட்பட 117 செயலிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் அந்நிறுவனத்திற்கு பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்பட்டது.

   
   

மேலும், இந்தியளவில் பப்ஜி விளையாட்டினை பலரும் விளையாடி வரும் காரணத்தால், இந்தியாவில் மீண்டும் பப்ஜி செயலியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை பப்ஜி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சோதனைக்காக பப்ஜி பீட்டா வெர்சனை வெளியிட்டது.

அப்பொழுது ஜனவரி 15 – 19 ஆம் தேதிக்குள் பப்ஜி கேம் வெளியாகும் என தகவல்கள் வெளியான நிலையில், கேமின் துவக்கம் குறித்த ஒரு டீசரை பப்ஜி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்த புதிய டீசர் வைரலாகி வரும் நிலையில், கேம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், இந்த பப்ஜி கேமை எவ்வாறு இந்தியாவில் விளையாடலாம் என்பது குறித்து காணலாம்.

  • முதலில் ஏதாவது ஒரு VPN-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
  • இந்தியாவை தவிர வேறு ஏதாவது ஒரு சர்வரை தேர்ந்தெடுங்கள்.
  • கூகுள் குரோம் அல்லது வேறு ஏதாவது ப்ரவுசருக்குள் சென்று, பப்ஜியின் குளோபல் தளத்திற்குள் செல்லவும்.
  • பின்னர், வலதுபுறத்தில் APK ஃபைலை பதிவிறக்கம் செய்ய ஒரு பக்கம் வரும். அதற்க்குள் சென்று பதிவிறக்கம் செய்யவும்.
  • அந்த ஃபைலின் அளவு 624MBக்கு கூடுதலாக இருக்கும். முடிந்ததும், கேம்க்குள் சென்று, தேவையான அனைத்து பைல்களும் இன்ஸ்டால் செய்து விளையாடலாம்.

பப்ஜி விளையாட்டை ஆண்ட்ராய்டு பயனர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் ஆப்பிள் பயனர்கள், இன்னும் காத்திருக்க வேண்டும்.

Dinasuvadu Media @2023