“நீ ஒரு ஆண் குயில் டா” வந்துருடா பாலு, எழுந்து வாடா..கண்ணீருடன் பாரதிராஜா வெளியிட்ட வீடியோ.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ். பி. பி-யை எழுந்து வாடா என்று கூறி பாரதிராஜா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு கடந்த 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். பின் கடந்த 13-ம் தேதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.எஸ்.பி. பாலசுப்பிரமணியனை  உடல்நலம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இதற்கிடையில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து அ‌வ்வ‌ப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருவதோடு , அவரது மகனான எஸ். பி. சரணும் வீடியோ மூலம் அவரது உடல்நலம் குறித்து தெரிவித்து வருகிறார்.

நேற்றைய தினம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் செயற்கை சுவாச உதவியோடு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் எஸ்பிபி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இயக்குநரும், எஸ்பிபி-யின் நெருங்கிய நண்பரும் பாரதிராஜா கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் நேசத்திற்கும், பாசத்திற்குரிய பாலு டேய் எழுந்து வாடா, வாடா என்ற உரிமையை நீ எனக்கும், நான் உனக்கும் கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிறது.

என்னுடைய பள்ளி நாட்களில் நான் எந்த நண்பர்களுடனும் இந்தளவிற்கு பழகியதில்லை. எம். எஸ். வி கச்சேரிக்காக சிதம்பரம், வேலூருக்கு உன்னுடைய பியட் காரில் என்னை அருகில் அமர்த்தி நான் கதை சொல்ல நீ காரை ஓட்டி செல்வாய் என்று கூறினார்.

என்னை கே. விஸ்வநாத்திடம் சேர்த்து விட உன்னிடம் கேட்ட போது கதை வைத்திருக்கிறாயா என்று கேட்டு விட்டு ஒன்றரை லட்சம் ரூபாயில் படம் எடுக்கும் NFDC என்ற ஒரு ஐடியாவை நீ சொன்னது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

அதனையடுத்து பிரசாத் ஸ்டுடியோஸில் உள்ள ரெக்கார்டிங் தியேட்டருக்கு வெளியே உள்ள புல்வெளியில் வைத்து உனக்கு நான் ‘மயில்’ என்ற கதையை சொல்ல, உனக்கு அதை பிடித்து போய் அதன் ஆரம்ப செலவுக்கு 5000 ரூபாய் கொடுத்ததும், அப்போது உனக்கு பல்லவி பிறக்க, அவளது பெயரில் அதாவது பல்லவி புரொடக்ஷன் பெயரில் முதலில் ஆரமிப்பதாக கூறியதும், அது சில காரணங்களால் நின்றும் விட்டது. இவை எல்லாம் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. உன் வீட்டு உப்பை தின்னு வளர்ந்த எங்களை விட்டு போக்குவரத்து எப்படி டா உனக்கு மனசு வரும், வராது நீ திரும்ப வந்துருவானு எனக்கு நம்பிக்கை இருக்கு.

என்னுடைய ’16 வயதினிலே’ பூஜைக்கு நீ பாட வேண்டும் என்று சொன்ன போது, உனக்கு துண்டை சரியில்லாமல், உன்னுடைய இடத்தில் மலேசியா வாசுதேவன் பாடினார். அதன் பிறகு நிழல்கள் படத்தில் பொன்மாலை பொழுது என்ற பாடலை பாடி , அது இன்றளவும் உலகமே வியந்து கொண்டாடுகிறது.

நீ பொன்மாலை பொழுது பாடலாம், ஆனால் பொன்மாலை பொழுது வரக் கூடாது, உனக்கு பொன்காலை பொழுது தான் வரவேண்டும். நான் மட்டுமில்ல பாலு, உலகிலுள்ள எல்லா கலைஞர்களும் கண்ணீர் விடுறோம். இரண்டு நாட்களாக என் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டிருக்கிறேன்.

இந்த வீடியோவில் அழகு கூடாது என்று முயற்சிக்கிறேன். பாலு வந்துருவடா, நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் எல்லாம் உண்மையென்றால் நீ மீண்டும் வருவாய், எங்களுடன் பழகுவாய், இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை நீ பாடுவாய், நீ ஒரு ஆண் குயில், வந்துருடா பாலு என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.