லாக்டவுனில் காதலை கூறி திருமணத்தையும் முடித்த 'கலக்க போவது யாரு' யோகி.!

கலக்க போவது யாரு புகழ் யோகி, ஊரடங்கில் தனது காதலை வெளிப்படுத்தி

By ragi | Published: Jul 05, 2020 08:15 PM

கலக்க போவது யாரு புகழ் யோகி, ஊரடங்கில் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்தையும் முடித்ததாக கூறப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யோகி. இவர் ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி யோகி தனது காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். ஊரடங்கு காரணமாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்த யோகி மற்றும் சவுந்தர்யா,  கல்லூரி ரி-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்த யோகிக்கு காதல் மலர்ந்ததாம். ஆனால் தனது காதலை அப்போது வெளிப்படுத்தாத யோகி ஊரடங்கு காலத்தில் தனது காதலை சவுந்தர்யாவிடம் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது யோகியின் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Step2: Place in ads Display sections

unicc