எந்தவித அறிகுறியும் இல்லாமல் 11 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 46,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,257 பேர் பாதிக்கப்பட்டனர்.

தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. நேற்று  797 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 25,347  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று மட்டும் 44 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 11 பேர் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6 முதல் இப்போது வரை  எந்தவித அறிகுறியும் 52 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.