ஏழே நாட்களில் 7 கிலோ எடையை குறைப்பது எப்படி?

நம்மில் பெரும்பான்மையினர் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனை என்னவென்று பார்த்தால், அது நிச்சயம் உடல் எடை அதிகரிப்பு தான். உண்ணும் உணவில் கட்டுப்பாடு இன்றி உண்ணுதல், மரபு வழி, உடல் அமைப்பு, உடலுழைப்பு இல்லாமை என்ற பல்வேறு காரணங்களால் உடலின் எடை அதிகரிக்கிறது. அதிகமான உடல் எடையை கொண்டு அன்றாட செயல்களை, எளிய செயல்களை கூட செய்ய முடியாமல் திண்டாடுபவர் பலர்; உடல் எடை அதிகரிப்பால் வருந்திக் கொண்டிருக்கும் நபர்களின் துயர் துடைக்கவே இந்த பதிப்பை வழங்குகிறோம்.

ஜிம்மிற்கு செல்லாமல், அதிகம் காசு செலவு செய்யாமல் உணவு மற்றும் எளிய உடற்பயிற்சிகள் மூலம் எப்படி ஏழே நாட்களில் உடல் எடையை குறைப்பது என்பது குறித்து இந்த பதிப்பில் படித்து அறிவோம்.

முதல் நாள்

ஏழு நாள் உணவு திட்டத்தில் அதாவது 7 நாள் டயட் பிளானில் முதல் நாளன்று, வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்கள் மற்றும் தண்ணீர் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும். சரியான உணவு முறையை பின்பற்றுதலுடன் போதுமான அளவு உடற்பயிற்சியும் செய்தல் அவசியம்.

உணவு உண்ணும் முறை:

காலை உணவாக ஒரு ஆப்பிள் மற்றும் 1 டம்ளர் தண்ணீர், இடைவேளை தீனியாக முலாம்பழ துண்டுகள் மற்றும் ஒரு குவளை தண்ணீர், மதிய உணவாக நறுக்கிய தண்ணீர்பழ துண்டுகள் மற்றும் 2 கப் நீர், மாலை தீனியாக ஒரு ஆரஞ்சு பழம் மற்றும் 1 கப் நீர், இரவு உணவாக முலாம்பழ துண்டுகள் மற்றும் 2 டம்ளர் நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

8-12 கப் நீர் மற்றும் மேற்கூறிய பழங்கள் தவிர வேறு எந்த வித உணவினையும் உண்ணுதல் கூடாது; முலாம்பழம் கிடைக்காத சூழலில் அதற்கு பதிலாக வெள்ளரிக்காய் மற்றும் ஆரஞ்சிற்கு பதிலாக திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். உடற்பயிற்சியை சரிவர செய்யாமல் விட்டால், சரியான பலன் கிடைக்காமல் போகலாம்; ஆகையால் உடற்பயிற்சியை சரியாக செய்து வரவும்.

இரண்டாம் நாள்

டயட்டின் இரண்டாம் நாளில் காய்கறிகள் மற்றும் 8-12 டம்ளர் நீர் மட்டுமே உட்கொள்ள வேண்டும். எண்ணெய், மசாலா போன்ற பொருட்களை காய்கறிகளுடன் சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

உணவு உட்கொள்ளும் முறை:

காலை உணவாக ஒரு பெரிய வேகவைத்த உருளைகிழங்கினை ஒரு தேக்கரண்டி வெண்ணெயுடன் சேர்த்து உண்ணலாம்; இடைவேளை தீனியாக முட்டைகோஸ், கீரைகள் கலந்த சாலட் மற்றும் ஒரு குவளை தண்ணீர், மதிய உணவாக வெள்ளரிக்காய், வெங்காயம் என நறுக்கிய காய்கள் கலந்த சாலட் மற்றும் 2 கப் நீர், மாலை தீனியாக வேகவைத்த ப்ரோக்கலி மற்றும் 2 கப் நீர், இரவு உணவாக வேகவைத்த கேரட், ப்ரோக்கலி, பச்சை பட்டாணி போன்றவை அடங்கிய காய்கறி சாலட் மற்றும் 2 டம்ளர் நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

இந்த காய்கறிகளை உட்கொள்ள தேவையான உப்பு, மசாலா – மிளகுத்தூள் போன்றவற்றை லேசாக மட்டும் சேர்த்துகொள்ளவும். இது சற்று கடினமான விஷயம் தான்; ஆனால் இதை தாண்டினால் தான் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை மறவாதீர்கள். இந்த உணவு முறையுடன் தினந்தோறும் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளையும் மறவாமல் செய்து வரவும்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாளன்று காய்கறிகளும், பழங்களும் கலந்த கலவையாக உணவினை உட்கொள்ளல் வேண்டும்.

உணவு உட்கொள்ளும் முறை:

காலை உணவாக முலாம்பழ துண்டுகள் அல்லது ஆப்பிள் மற்றும் 2 கப் தண்ணீர், இடைவேளை தீனியாக அன்னாசி பழம் அல்லது பேரிக்காய் மற்றும் இரு குவளை தண்ணீர், மதிய உணவாக வெள்ளரிக்காய், கேரட், கீரைகள் என நறுக்கிய காய்கள் கலந்த சாலட் மற்றும் 2 கப் நீர், மாலை தீனியாக ஆரஞ்சு பழம், நறுக்கிய முலாம்பழ துண்டுகள் மற்றும் 1 கப் நீர், சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் பேரிக்காய் மற்றும் 1 கப் நீர், பின் இரவு உணவாக வேகவைத்த ப்ரோக்கலி, பீட்ரூட் போன்றவை அடங்கிய காய்கறி சாலட் மற்றும் 2 டம்ளர் நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

இந்த நாள் சற்று இலகுவானது தான்; காய்கறிகள் மற்றும் பழங்கள் கலந்த கலவை உணவை சரியாக உட்கொள்ளுங்கள்; இந்த சரியான உணவு முறையுடன் தினமும் சரியான உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்து வரவும்.

நான்காம் நாள்

டயட்டின் நான்காம் நாள் ஒரு சிறந்த நாள் என்றே கூறலாம். இந்த நாளில் 8-10 வாழைப்பழங்கள், 4 கப் பால், 8-12 தண்ணீர் இந்த மூன்று உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

உணவு உண்ணும் முறை:

காலை உணவாக இரு பெரிய வாழைப்பழங்கள் மற்றும் 1 கப் பால் இவற்றை உண்ணவும்; இடைவேளை தீனியாக ஒரு வாழைப்பழத்தை ஷேக் போன்று செய்து தேன் சேர்த்து பருகவும்; மதிய உணவாக ஒரு குவளை காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப், மாலை தீனியாக வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து தயாரித்த மில்க்க்ஷேக், சிறிது நேரத்திற்கு பின் 2 சிறிய வாழைப்பழங்கள், பின் இரவு உணவாக 2 பெரிய வாழைப்பழங்கள் மற்றும் 1 டம்ளர் பால் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

இந்நாள் மிகவும் சுலபமாக கடக்க கூடிய ஒன்றே; தண்ணீர் மற்றும் பால் இவற்றை பசிக்கும் தருணங்களில் பருகி வரலாம். இந்த உணவு முறையுடன் தினமும உடற்பயிற்சிகளையும் சரியாக செய்து வரவும்.

ஐந்தாம் நாள்

இந்த நாள், மற்ற நாட்களை காட்டிலும் சற்று வித்தியாசமானது; இந்த நாளில் 6 தக்காளி பழங்கள், 12-15 குவளை தண்ணீர், 1 கப் பிரௌன் ரைஸ் இவற்றை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

உண்ணும் முறை:

காலை உணவாக சில தக்காளிகள் மற்றும் வேகவைத்த பீன்ஸ் கலந்த கலவை மற்றும் 2 கப் நீர், இடைவேளை தீனியாக ஒரு கப் தயிர் மற்றும் 2 கப் நீர், மதிய உணவாக ஒரு கப் பிரௌன் ரைஸினை 2 தக்காளிகள் சேர்த்து உட்கொள்ளலாம் மற்றும் 2 டம்ளர் தண்ணீர், மாலை தீனியாக முளைகட்டிய பயறுகள், வெங்காயம் சேர்த்த சாலட் மற்றும் 2 கப் நீர், சிறிது நேரத்திற்கு பின்1 ஆப்பிள், பின் இரவு உணவாக காய்கறிகள் கொண்டு தயாரித்த சூப் மற்றும் 2 டம்ளர் தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

இந்த நாளில் சாதத்தை உண்ணும் வாய்ப்பு கிடைக்கும்; பலநாள் கழித்து சாதம் சாப்பிடும் ஆர்வத்தில் அளவு மீறாமல் இருக்க முயலுங்கள். மேலும் தக்காளி, சூப், தயிர் போன்ற உணவுகளை உரிய நேரத்தில் உட்கொள்ளுங்கள். இந்த உணவு முறையுடன் தினமும உடற்பயிற்சிகளையும் சரியாக செய்து வரவும்.

ஆறாம் நாள்

இந்த நாளில் ஒரு கப் பிரௌன் ரைஸ், காய்கறிகள் மற்றும் 8-12 குவளை தண்ணீர் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

உட்கொள்ளும் முறை:

காலை உணவாக பலதரப்பட்ட வேகவைத்த காய்கள் கலந்த சாலட் மற்றும் 2 கப் தண்ணீர், இடைவேளை தீனியாக தக்காளி, சிறுநீரக வடிவ பீன்ஸ், சற்று மசாலா கலந்த சாலட் மற்றும் இரு குவளை தண்ணீர், மதிய உணவாக 1 கப் பிரௌன் ரைஸ் மற்றும் 2 கப் நீர், மாலை தீனியாக 3-4 கேரட்கள் மற்றும் 1 கப் நீர், சிறிது நேரத்திற்கு பின் கொஞ்சம் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப் மற்றும் 1 கப் நீர், பின் இரவு உணவாக 1 பௌல் வேகவைத்த காய்கறிகள் சாலட் மற்றும் 1 டம்ளர் நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

காய்கறிகளும், சாதமும் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டிய இந்த தினம் அன்றாட நாள் போன்று இருக்கலாம். இந்த சரியான உணவு முறையுடன், சரியான உடற்பயிற்சிகளையும் தவறாமல் செய்து வரவும்.

ஏழாம் நாள்

டயட்டின் ஏழாம் நாளினை விருந்து தினம் என்றே கூறலாம்; இந்த நாளில் ஓரு கப் பிரௌன் ரைஸ், அனைத்து வகை பழச்சாறுகள், அனைத்து காய்கறிகள் போன்றவற்றை உண்ணலாம்.

உணவு உட்கொள்ளும் முறை:

காலை உணவாக வேகவைத்த காய்கறிகள் கலந்த சாலட் மற்றும் 1 குவளை ஆப்பிள் அல்லது ஆரஞ்சு சாறு, இடைவேளை தீனியாக காய்கறி சூப் சிறிதளவு, சில கேரட்கள் மற்றும் ஒரு குவளை தண்ணீர், மதிய உணவாக வேகவைத்த காய்கள் கலந்த சாலட், 1 கப் பிரௌன் ரைஸ் மற்றும் 2 கப் நீர், மாலை தீனியாக சில கேரட்கள் மற்றும் 1 கப் கிவிப்பழ சாறு, சிறிது நேரத்திற்கு பின் வேகவைத்த காய்கள் கொண்ட சாலட் மற்றும் 2 கப் தண்ணீர், இரவு உணவாக காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப் மற்றும் 2 டம்ளர் நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

கவனிக்க:

இந்த ஏழாவது நாளையும் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் கடந்து விட்டால் போதும், உடல் எடை குறைப்பு என்னும் இலக்கை எளிதில் அடைந்து விடலாம்.

நினைவில் கொள்க:

உடனடியாக உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இந்த டயட் முறையை பின்பற்றலாம்; ஆனால் இந்த டயட்டை தொடங்கும் முன் உங்கள் உடல் நலம் சரியாக உள்ளதா என்று மருத்துவரிடம் ஒருமுறை பரிசோதித்து பார்த்துக் கொள்ளவும்; மருத்துவரிடம் இந்த டயட் முறை உடலுக்கு பொருந்துமா என்றும் கலந்தாலோசித்துக் கொள்ளவும். அனைத்தையும் தீர அறிந்த பின் இந்த ஏழு நாள் உணவு முறையை பின்பற்றி, உடல் எடையை எளிதில் – விரைவில் குறைத்திடுங்கள்..

author avatar
Soundarya

Leave a Comment