கோவில் வளாகத்தில் யாகங்கள் அனுமதியில்லை.! – உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திருச்செந்தூர் கோவிலுக்கு வெளியே கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரி. கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதி இல்லை. – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. 

வரும் ஞாயிற்று கிழமை கந்தசஷ்டி திருவிழா அனைத்து முருகன் கோவிலிலும் கொண்டாடப்பட உள்ளது. புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் தற்போது இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

அவர்களை கோவில் வளாகத்தில் அதாவது கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சஷ்டி விரதம் இருக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது. இது குறித்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணையில் இருந்தது.

கோவிலுக்குள் சஷ்டி விரதம் இருக்க அனுமதிக்க கோரப்பட்டு இருந்தது. இதுகுறித்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம், கோவிலுக்கு வெளியே கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு விரதம் இருக்க அனுமதி அளித்த தமிழக அரசின் நிலைப்பாடு சரியே எனவும். கோவிலுக்குள் யாகங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு விதித்தது.

மேலும்,  திருச்செந்தூரில் அனுமதி கேட்பது போல திருப்பதி கோவில் உள்ளே சென்று விரதம் இருக்க அனுமதி கேட்க முடியுமா.? என்றும் கேள்வியையும், உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கேட்டனர். மேலும் இந்த விவகாரம் குறித்து, தமிழக அரசுக்கு அறநிலையத்துறை செயலர் விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது .

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment