சியான் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர்…??

சியான் 60 படத்தில் பிரபல படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்  தினேஷ் சுப்பாராயண் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் , சனந்த் ரெட்டி , முத்துக்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். படத்தில் ஒளிபதிவாளரான ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றி வருகிறார். எடிட்டராக விவேக் ஹர்ஷன் பணியாற்றுகிறார். இதனை தொடர்ந்து, இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனர் தினேஷ் சுப்பாராயண் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.