31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

ஆஹா…7 போட்டியில் 50 விக்கெட் …’உலக சாதனை’ படைத்த இலங்கை வீரர்.!!

டெஸ்ட்  போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார். 

இலங்கை அணி தற்போது அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்  போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

அதன்படி, பிரபாத் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் அதிவேகமாக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை (எட்டு போட்டிகள்) வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார். தற்போது அவருடைய அந்த சாதனையை பிரபாத் ஜெயசூர்யா முறியடித்துள்ளார்.

மேலும், பிரபாத் ஜெயசூர்யா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களும், அடுத்த இன்னிங்சில் தற்போதுவரை,  2 விக்கெட்  என மொத்தமாக 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் இவர் இந்த உலக சாதனையை படைத்துள்ளார். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.