ரிக் இயந்திரம் மூலம் துளையிடம் பணி தொடங்கியது..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது.
அரசு மேற்கொண்ட பலகட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வர வைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அருகில் 3 மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலத்தில் 110 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படும் குழி தோண்டப்பட்ட பிறகு கண்ணதாசன் , திலீப்குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று தீயணைப்பு வீரர்கள் குழியில் இறங்கி  அங்கு இருந்து குழந்தையை மீட்க முடிவு செய்து உள்ளனர்.
ரிக் இயந்திரம் மூலம் 1 மணி நேரத்தில் 110 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

author avatar
murugan