சக ஊழியர்களால் நாடாளுமன்றத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் – மன்னிப்பு கேட்ட ஆஸ்திரேலிய பிரதமர்!

நாடாளுமன்றத்தில் வைத்து சக ஊழியர் ஒருவரால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்கள் இந்த தவறுக்காக தான் மன்னிப்பு கோருவதாக கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு மந்திரி ரொனால்ட்ஸ் அலுவலகத்தில் வைத்து ஆளும் லிபரல் கட்சியில் பணியாற்றிய ஒருவரால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பிரிட்டானி ஹென்னக்ஸ் எனும் பெண் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் முறையாக அப்போது புகார் அளிக்க விரும்பாத அவர், தற்போது முறையாக புகார் அளிக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலமாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இவ்வாறு நடந்ததாக ஏற்கனவே காவல்துறையில் தகவல் தெரிவித்தது போலவே, பாதுகாப்பு மந்திரியின் அலுவலகத்தில் உள்ள மூத்த ஊழியர்களிடமும் இதுகுறித்து தெரிவித்திருந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அந்தப் பெண் கூறியது உண்மைதான் என பாதுகாப்பு மந்திரி ரெனால்ட்ஸ் அவர்களும் நேற்று உறுதிப்படுத்தி இருந்தா நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அவர்கள் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், அரசாங்கத்தின் பணியிட கலாச்சாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும், இந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் இவ்வாறு அந்த பெண்ணுக்கு நடந்து இருக்க கூடாது. இருப்பினும் மீறி நடந்து இருப்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்த அவர், இந்த இடத்தில் பணி புரிய கூடிய எந்த ஒரு இளம்பெண்ணும் பாதுகாப்பாக இருப்பதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal