பெண் என்றாலே பெருமை தானே!

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் பெண் என்றாலே அவளை  என்ற நிலையில்  வைத்திருந்தனர். அந்த வகையில் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் மறித்து மண்ணுக்குள் போகும் வரை பல அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்.

ஆனால், அந்த காலங்கள் எல்லாம் கடந்து போய், இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து பல சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள். ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்பதை எல்லா துறைகளிலும் நிரூபித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும்,  மார்ச் 8-ம் நாளன்று மகளீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை அனைத்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்களை பொறுத்தவரையில் இன்று அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வந்தாலும், இன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் அதிகரித்து தான் வருகிறது. இதற்கு எதிராக பல போராட்டங்கள் எழுந்தாலும், இந்த குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆனாலும், பல துறையிலும் சாதிக்கும் பெண்கள், விரைவில் இதற்கும் முடிவு காட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன் நாட்கள் கடந்துக் கொண்டிருக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.