ஐபிஎல் போட்டி ரத்து! வெளியுறவு அமைச்சகம் முக்கிய தகவல்.!

ஐபிஎல் போட்டியை கொரோனா வைரஸ் பாதிப்பால் தள்ளிவைக்க வேண்டும் என்றும் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது .

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2020 போட்டியை  நடத்துவதற்கு எதிராக வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது, ஆனால் போட்டியை நிறுத்துவதற்கான உரிமை அமைப்பாளர்களிடமே உள்ளது என்று கூறியுள்ளது .”ஐபிஎல் நடத்துவதற்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஆனால் இறுதி முடிவு அமைப்பாளர்களிடமே உள்ளது” என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விசா ரத்து 

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் ஏப்ரல் 15 வரை, முக்கிய தேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சில பிரிவுகளைத் தவிர, தற்போதுள்ள அனைத்து வெளிநாட்டு விசாக்களுக்கும் தடை விதித்து அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டது.இதனால் ஐபிஎல் லில் பங்கேற்க வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு இந்த விசா தடை பொருந்தும் என்பதால் ஐபிஎல் போட்டி ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது .

இந்தியாவில் கொரோனோ

இந்தியாவில் கொரோனோவால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உலகளவில் கொரோனோவால் 4000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு  கொரோனோவை உலகளாவிய தொற்றுநோய் என்று அறிவித்துள்ளது .இதனால் உலகமுழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

author avatar
Castro Murugan