தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானையை ரயில் மோதியதில் பரிதாப உயிரிழப்பு.!

  • கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் யானையின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
  • அது சுமார் 20 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கேரளா வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த காட்டு யானை பாலக்காடு மாவட்டம் கோட்டைக்காடு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் யானையின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்நிலையில், தகவலறிந்து வந்த கேரள வனத்துறையினர் அந்த யானையின் உடலை கைப்பற்றினர். பின்னர் அது சுமார் 20 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வனப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும், என தொடர் கோரிக்கை எழுந்த வரும் நிலையில், விபத்தில் யானை உயிரிழந்த சம்பவம், வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்