புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதது ஏன்? – பிரதமர் மோடி

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் அனைத்து மக்களையும் சென்றடையும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜெய் செஹத் திட்டத்தை (மருத்துவ காப்பீடு) பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து பேசிய பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் ஏன் நடத்தவில்லை. ஜனநாயகம் குறித்து பாடம் எடுப்போர்தான் புதுச்சேரியில் ஆட்சி செய்கின்றனர். புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது என தெரிவித்துள்ளார். எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அதிகாரப்பகிர்வு, வார்டு மருவரையறை பிரச்சனையால் தேர்தல் நடத்தப்படவில்லை என்று தகவல் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்