இந்தியை ஏன் கற்க வேண்டும்? 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை!

10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தி மொழி குறித்து இடம்பெற்ற கேள்வியால் சர்ச்சை.

கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், குறுவினா பகுதியில், ‘இந்தியை கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக’ என கேட்கப்பட்டிருந்ததாக இணையத்தில் சில புகைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில், பள்ளிக்கல்வி துறை மாணவர்களிடையே இந்தியை திணிப்பதாக, கண்டன குரல்கள் எழுந்தது. இதனையடுத்து, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை, 10-ம் வகுப்பு பாடப்பகுதியில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர 3-வது மொழியாக கற்க விரும்பும் மொழி எது? அதற்கான காரணம் எழுது என்று தான் கேட்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

மேலும், இந்தி திணிப்பு தொடர்பான தகவல் உண்மை இல்லை என்றும், இந்தி மொழி பற்றிய எந்த குறிப்பும் அதில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.