விஜய்க்கு கிடைப்பது எனக்கு ஏன் கிடைக்கவில்லை.!பிரபல பாடகியிடம் அஜித் கேட்ட கேள்வி.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் அவர்கள் ரஜினிக்கு இணையாக சினிமாயுலகில் வளர்ந்து நிற்பவர். அதை போன்று இவர்களுக்கென்று மிகப் பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர். இவர்களின் படம் ரிலீஸ் என்றால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். விஜய் அவர்கள் சமீபத்தில் மாஸ்டர் விழாவில் கூட நண்பர் அஜித் என்று கூறியது மிகவும் டிரெண்டானது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மாஸ்டர் படத்தின் ரிலீஸில் உள்ளது. மேலும் அஜித் அவர்கள் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் பாடகி சுஜித்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தல மற்றும் தளபதியை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், அஜித் அவர்கள் என்னிடம் ஒருமுறை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் நீங்கள் பாடிய பாடலான ஒரு சின்னத்தாமரை பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றும், விஜய்க்கு எப்படி தான் நல்ல பாடல்கள்  கிடைக்கிறதோ என்று சுஜித்ராவிடம் கேட்டதாக கூறியுள்ளார்.