வெல்லப்போவது யார்..? இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது டெல்லி…!

ஐபிஎல் 2023 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. 

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் 11-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையில் விளையாடவுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் அரைசதம் அடித்தனர். ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை ஒரு ஆட்டத்தில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளனர்.

ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், டேவிட் வார்னர் தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. டெல்லி அணியில் டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரோவ்மன் பவல், மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், குல்தீப் யாதவ் என பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், இரு அணிகளும் சம பலத்துடன் களமிறங்குவதால் இன்றைய போட்டியில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

ராஜஸ்தான் vs டெல்லி : போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்களின் பட்டியல்.

ராஜஸ்தான் ராயல்ஸ் :

ஜோஸ் பட்லர்/ஜோ ரூட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (C&W), தேவ்தத் பாடிக்கல்/துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட் மற்றும் கேஎம் ஆசிஃப்.

டெல்லி கேப்பிடல்ஸ் :

டேவிட் வார்னர் (C), பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், சர்பராஸ் கான், ரிலீ ரோசோவ்/ரோவ்மேன் பவல், அபிஷேக் போரல் (W), அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார் மற்றும் குல்தீப் யாதவ்

RELATED ARTICLES