Connect with us

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர் ..! யார் இந்த மோனன்க் பட்டேல்?

கிரிக்கெட்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய வம்சாவளி வீரர் ..! யார் இந்த மோனன்க் பட்டேல்?

மோனன்க் பட்டேல்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது.

இது ஒட்டு மொத்த கிரிக்கெட் வரலாற்றிலே ஒரு புதிய மைல் கல் சாதனையாக அமைந்துள்ளது. மேலும், இந்த போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு மிகமுக்கிய காரணமாக அமைந்ததே அமெரிக்க அணியின் கேப்டனான மோனன்க் பட்டேல் தான். அவர் அடித்த 38 பந்துக்கு 50 ரன்கள் தான் அமெரிக்கா அணிக்கு கை கொடுத்து அதன்பின் சூப்பர் ஓவர் சென்று வெற்றி பெறுவார்கள்.

யார் இந்த மோனன்க் பட்டேல்?

அமெரிக்கா அணியின் கேப்டனான மோனன்க் பட்டேல் நம் இந்திய மண்ணை சேர்ந்தவர் ஆவார். அவர் 1993-ம் ஆண்டு குஜராத்தில் உள்ள அனந்த் என்ற பகுதியில் பிறந்த இவர் குஜராத் மாநில அண்டர் 16 (Under -16) மற்றும் அண்டர் 18 (Under -18) அணிக்காக விளையாடி இருக்கிறார். அதன் பின் 2010ம் ஆண்டு அமெரிக்கா சென்ற இவர் அமெரிக்க குடிமகனாகவே மாறி அங்கேயே வாழ்ந்து வந்தார்.

அதனை தொடர்ந்து அமெரிக்காவின் உள்ளூர் கிரிக்கெட் அணியில் விளையாடத் துவங்கினார். அதன் பின் அவருக்கு அமெரிக்க கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷனில் உகாண்டா அணியுடனான மூன்று போட்டி கொண்ட தொடரில் சதம் அடித்தார். அதுவே அமெரிக்க அணியின் முதல் சர்வதேச சதமாகும்.

அமெரிக்க அணிக்காக முதல் சர்வதேச சதம் அடித்த வீரர் என்ற பெருமையயும் பெற்றார். இதை அடுத்து 2021-ம் ஆண்டு அவர் அமெரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான் இந்த ஆண்டின் டி20 உலகக்கோப்பை தொடருக்கும் அமெரிக்க அணியின் கேப்டனாகவே அறிவிக்கப்பட்டார். இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடந்த வங்கதேச அணியுடனான டி20 தொடரை கைப்பற்றி கேப்டனாக அமெரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஒரு இந்தியராக பிறந்த இவர், நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா அணியை ஒரு தூணாக நின்று வெற்றி பெற வைத்ததால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் இவருக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருவதோடு இவரை கொண்டாடியும் வருகின்றனர்.

Continue Reading

More in கிரிக்கெட்

To Top