சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்..!

சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல். 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற்ற சீனாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஆகும்.

 இந்நிலையில், சினோவாக் தடுப்பூசியை சீனாவை தவிர்த்து, பிரேசில்,. சிலி, இந்தோனேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் பயன்படுத்துகிறது. பைசர், மாடர்னா ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ரா ஜெனகா ஆகிய தடுப்பூசிகளுக்கு,  உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.