Monday, June 3, 2024

ஐநா சபையானது ஒரு நிறுவனம் போல மாறிவிட்டது.! மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் விமர்சனம்.!

ஐநாவின் பங்குதாரர்கள் தற்போது மாறியது போல் தான் உள்ளதே தவிர, அதன் நிர்வாகம் மாறவில்லை. தற்போது புதிய பங்குதாரர்கள் உள்ளனர். – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து. 

சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபை பற்றி  மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் நிகழ்வில் பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். குறிப்பாக தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

ஐநா மீது விமர்சனம் : அவர் கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையானது, தற்போது உலகளாவிய உண்மைகளை துல்லியமாக வெளிப்படுத்துவது இல்லை. அதனால், ஐநா தற்போது சீர்திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது ஐநா ஒரு நிறுவனம் போல செயல்படுகிறது என விமர்சித்து இருந்தார்.

நியாயமான நிர்வாகம் : மேலும், ஐநாவின் பங்குதாரர்கள் தற்போது மாறியது போல் தான் உள்ளதே தவிர, அதன் நிர்வாகம் மாறவில்லை. தற்போது புதிய பங்குதாரர்கள் உள்ளனர்.எனவும், ஐநாவில் நியாயமான நிர்வாகம் வேண்டும். ஐநாவில் உலகளாவிய பிரச்சினை எளிதில் தீர்க்கப்படப்போவதில்லை. ஆனால் அதன் மீது ஒவ்வொரு நாளும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. எனவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி : அடுத்ததாக, அண்டை நாடு பொருளாதார நெருக்கடியை அனுபவிப்பது எந்த நாட்டுக்கும் உகந்தது அல்ல என இலங்கை மற்றும் பாகிஸ்தானை குறிப்பிட்டு பேசினார். மேலும், 30 ஆண்டுகளுக்கு முன்பு நாம்இதே நிலைமையை அனுபவித்தோம் எனவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானின் நிலைமையானது ஒரு கட்டத்தில் மேம்படும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். எந்த ஒரு நாட்டின் அடிப்படை தொழில் பயங்கரவாதமாக இருந்தால் அந்த நாடு கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியே வந்து வளமான சக்தியாக மாற முடியாது எனவும் ஆப்கன் தாலிபன்கள் ஆட்சி பற்றியும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் மத்திய அமைச்சர்  ஜெய்சங்கர்.

RELATED ARTICLES