மேட்டூர் அணை திறப்பு எப்போது? முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

மேட்டூர் அணையை ஜூன் 12 ல் திறப்பது தொடர்பான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

மேட்டூர் அணையை ஜூன் 12 ல் திறப்பது தொடர்பான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவ மழை துவங்கும் காலத்தை கணக்கிட்டு நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்தது. பின்னர், தென்மேற்கு பருவ மழை துவங்கி அணை நிரம்பிய பிறகே, மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுவிட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் மேட்டூர் அணை நீர் திறப்பது தொடர்பான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்